Reading Time: < 1 minute

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

Tamil Business Directory

இந்த சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றையதினம் (10.01.2024) இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின்போது, கனடாவிலிருந்து வருகைதரும் பலர் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றமை தொடர்பில் வட மாகாண ஆளுநர் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபித்ததன் பின்னர் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வுகள் எட்டப்படும் என ஆளுநர் தெரிவித்தார்.

மேலும், வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள பசுமை சக்திவள திட்டங்கள், பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.