Reading Time: < 1 minute

அல்பேர்ட்டா மாகாணத்தின் என்.டி.பி கட்சியின் தலைவராக நாஹீட் நன்ஸீ தெரிவு செய்யப்பட்டுள்ளார். நன்ஸீ, கல்கரியின் முன்னாள் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Business Directory

கட்சி தலைமைப் பதவி குறித்த வாக்கெடுப்பில் நன்ஸீக்கு 86 வீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

கல்கரியைச் சேர்ந்த ஒருவர் அல்பேர்ட்டா மாகாண என்டிபி கட்சிக்கு தலைமை தாங்குவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியின் தலைமைப் பதவியை வகித்து வந்த ராசெல் நோட்லி பதவி விலகுவதாக ஜனவரி மாதம் அறிவித்திருந்தார்.

கடந்த 2015 மற்றும் 2019ம் ஆண்டுகளில் என்.டி.பி கட்சி தோல்விகளை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.