Reading Time: < 1 minute

ஒன்ராறியோவில் பெண் ஒருவர் தாம் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மொத்த மின் இணைப்பையும் துண்டித்து இருளில் மூழ்கடித்த சம்பவம் வெளியாகியுள்ளது.

Tamil Business Directory

குறித்த விவகாரம் தொடர்பில் தொடர்புடைய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். ஒன்ராறியோவில் Chatham பகுதியை சேர்ந்த 29 வயது பெண் ஒருவரே தாம் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மொத்த மின் இணைப்பையும் துண்டித்தவர்.

ஆனால், தமது குடியிருப்பின் மின் இணைப்பை அவர் துண்டிக்காமல் விட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவம் நடந்த வில்லியம் தெரு பகுதிக்கு சென்ற பொலிசார், சம்பவம் தொடர்பில் விசாரித்ததுடன் குறித்த பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து அவர் மீது 5,000 டொலர் தொகைக்கு கீழ் பொது சொத்துக்களுக்கு தீங்கு விளைவித்தவர் என்ற பிரிவில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 24ம் திகதி அவர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.