Reading Time: < 1 minute

கனடாவின் ஹமில்டன் பகுதியில் நகையகம் ஒன்றில் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பதின்ம வயது இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 சந்தேக நபர்களை தேடி வருவதாக அறிவிக்கப்படுகிறது.

அண்மையில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. சுத்தியல்களை பயன்படுத்தி நகையகத்தை உடைத்து நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் வாகனங்களின் ஊடாகவும் நடந்தும் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியை நாடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தொடர்பில் கைது செய்யப்பட்ட பதிம வயது இளைஞருக்கு எதிராக வழக்கு தொடரப்பட உள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் போலீசாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.