Reading Time: < 1 minute

டவுன்ரவுன் பகுதியில் அமைந்துள்ள ரொறன்ரோ பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட அமோனியா கசிவு காரணமாக இருவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்னர்.

Tamil Business Directory

இலக்கம் 80, சென் ஜோர்ஜ் வீதியில் அமைந்துள்ள லாஸ் மில்லர் இரசாயன ஆய்வுகூடத்திலேயே, இந்த சம்பவம் சம்பவித்துள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து குறித்த அந்தக் கட்டிடம் முற்றாக மூடப்பட்டது எனவும், எனினும் அங்குள்ள ஒரு அறையில் மட்டுமே அதன் பாதிப்பு இருந்ததாகவும் ரொறன்ரோ தீயணைப்பு துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதன்போது, அங்கிருந்த இருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், என்ன காரணத்தினால் இந்த அமோனியா கசிவு ஏற்பட்டது என்பது உடனடியாக கண்டறியப்படாத நிலையில், அதிகாரிகள் அது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.