Reading Time: < 1 minute

இன்று காலை வேளையில மிசிசாகாவில் அமைந்துள்ள உண்வகம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து 24 வயது ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

Hurontario Street மற்றும் Central Parkway பகுதியில் அமைந்துள்ள Wally’s Family உணவகனத்தில் இன்று அதிகாலை 2:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்ட நிலையில், உயிரிழந்தவர் மிசிசாகாவைச் சேர்ந்த கெய்ல் குளோடன் என்று அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், சந்தேக நபர் குறித்த அடையாளங்களும் உடனடியாக வெளியிடப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் இடம்பெற்ற வேளையில் குறித்த அந்த உணவகம் திறந்திருந்ததாகவும், அந்த வேளையில் பெரும்பாலும் அங்கே பலரும் இருந்திருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ள காவல்துறையினர், தடயவில் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆதாரங்களைச் சேகரித்து வருவதாகவும், ஏனைய அதிகாரிகளும் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் பேசி வருவதாகவும், ஒளிப்பதிவு ஆதாரங்களையும் சேகரித்து வருவதாகவும், இந்த நடவடிக்கைகள் இன்னமும் சில நாட்களுக்குத் தொடரக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் பீல் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ள 16ஆவது கொலைச் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.