Reading Time: < 1 minute

இன்று பிற்பகல் வேளையில் பிரம்டன் பகுதியில் மரம் ஒன்றின் மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 9 வயது சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Tamil Business Directory

Balmoral Drive மற்றும் Appleby Drive பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Balmoral Driveவில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த அந்த வாகனத்தின் சாரதி கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வாகனம் அங்கிருந்த மரம் ஒன்றில் மோதியுள்ளதாகவும், குறித்த அந்தச் சிறுவன் அமர்ந்திருந்த பகுதியே பலத்த பாதிப்புக்கு உள்ளானதாகவும் பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மிகவும் மோசமான காயங்களுடன் காணப்பட்ட சிறுவன் உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படட்தாகவும், அப்போது அவர் உயிராபத்தான நிலையிலேயே காணப்படடதாகவும் பீல் பிராந்திய அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். எனினும் சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் காவல்துறையினர் பின்னர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான அந்த வாகனத்தை செலுத்திச் சென்ற பெண், காயமடைந்த அந்தச் சிறுவனின் தாயார் எனவும், அவருக்கு காயங்கள் எவையும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கிப்படுகிறது.

விபத்தினை அடுத்து மூடப்பட்ட அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகள் சிறிது நேரத்தின் பின்னர் திறந்து விடப்பட்டுள்ளன.