Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் மிசிசாகா பகுதியில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞன் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதையடுத்து, படுகாயமடைந்த இளைஞனை பொலிஸார் நேற்று (செவ்வாய்க்கிழமை) மருத்துவமனையில் அனுமதித்தனர்.
டன்ராஸ் வீதி மற்றும் ஹைன்ஸ் சாலைக்கு அருகிலுள்ள மிசிசாகா சைனீஸ் சென்ரர் பிளாசாவில் உள்ள வங்கியில் ஒருவர் கொள்ளையில் ஈடுபட்டார்.
இதன்போது, சம்பவ இடத்திற்கு விரைந்த பீல் பிராந்திய பொலிஸார் சந்தேகநபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 18 வயதான குறித்த இளைஞனை கைது செய்த பொலிஸார், வைத்தியசாலையில் அனுமதித்தனர். இது தொடர்பான விசாரணை இடம்பெற்று வருகிறது.




