Reading Time: < 1 minute

ஹாலிஃபாக்ஸிலிருந்து வின்னிபெக் நோக்கிப் புறப்பட முயன்ற கனேடியர் ஒருவர், தனது கைப்பையில் இருந்த சிறிய மரப்பெட்டி காரணமாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

Tamil Business Directory

ஹாலிஃபாக்ஸைச் சேர்ந்த Vincent Masse என்பவர், தனது மறைந்த செல்ல நாயான Balthazar-ன் சாம்பலை எடுத்துக்கொண்டு வின்னிபெக் செல்ல முயன்றார். அவரது உடைமைகள் Halifax Stanfield International Airport-ல் CT X-ray scanner வழியாகச் சோதிக்கப்பட்டபோது, அந்த மரப்பெட்டியை பாதுகாப்பு அமைப்பு அனுமதிக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரித்தபோது, அந்த பெட்டியில் தனது செல்ல நாயின் சாம்பல் இருப்பதாக Masse விளக்கியுள்ளார்.

தனது நாயுடன் ஆழமான பாச உறவு கொண்டிருந்த Masse, அதன் நினைவாக சாம்பலின் சிறிய பகுதியை டாட்டூ மையில் கலந்து தனது உடலில் டாட்டூவாக பதிக்க விரும்பியிருந்தார். இப்படிப்பட்ட “cremation tattoo” செய்யும் டாட்டூ கலைஞர் ஒருவர் வின்னிபெக்கில் இருப்பது தெரியவந்ததால், அவர் அங்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

ஆனால், விமான நிலைய பாதுகாப்பு சோதனையில் சாம்பல் அடங்கிய பெட்டி தெளிவாக பரிசோதிக்க முடியாததால், அது விமானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. CATSA தகவலின்படி, சாம்பல் போன்ற அடர்த்தியான பொருட்கள் சில நேரங்களில் scanner-ல் தெளிவாக தெரியாமல் இருக்கலாம். மேலும், cremation container-ஐ அதிகாரிகள் திறந்து பார்க்க அனுமதி இல்லை; அது scanner சோதனையில் தகுதி பெற வேண்டும்.

பின்னர், வழிகாட்டுதலின் பேரில் Masse, சாம்பலின் சிறிய அளவை ஒரு சிறிய Ziploc plastic bag-ல் வைத்து மீண்டும் விமான நிலையம் சென்றார். இம்முறை அந்தப் பை பாதுகாப்பு சோதனையில் அனுமதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் வின்னிபெக் சென்று, தனது செல்ல நாய் Balthazar-ன் நினைவாக அதன் சாம்பல் கலந்து டாட்டூவை மார்பில் பதித்துக்கொண்டார்.

இந்த அனுபவம் குறித்து Masse, “விமான நிலையத்தில் scanner-ஐ எந்த பொருளும் தாண்டிச் செல்ல முடியாது என்பதை அன்றுதான் தெளிவாக புரிந்துகொண்டேன்” என கூறியுள்ளார்.

விமானப் பயணத்தில் cremated remains எடுத்துச் செல்ல வேண்டியவர்கள் முன்கூட்டியே விமான நிறுவனத்துடனும் CATSA விதிகளுடனும் சரிபார்த்து, plastic, cardboard, cloth அல்லது wood போன்ற scanner-ல் எளிதில் சோதிக்கக்கூடிய container-களை பயன்படுத்துவது நல்லது என CATSA பரிந்துரைக்கிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.