Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக இதுவரை 8 ஆயிரத்து 49பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் 55பேர் உயிரிழந்ததோடு, 413பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை 97,943பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 31,371பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 58,523பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுதவிர, 1,929பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




