Reading Time: < 1 minute

கனடாவில் விமானத்திலிருந்து குதித்து ஸ்கை டைவ் செய்த பெண் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் இன்னிஸிபில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Tamil Business Directory

இந்த சம்பவம் தொடர்பில் தென் சிம்கோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உள்ளுர் ஸ்கைடைவ் கழகமொன்றின் விமானத்திலிருந்து குதித்த பெண், இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

றொரன்டோவிலிருந்து சுமார் 60 கிலோ மீற்றர் தொலைவில் இந்த சம்பவம் இட்பெற்றுள்ளது.

விமானத்திலிருந்து குதித்த பெண், கீழே வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார். கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் குறித்த பெண் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த பெண்ணின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

எவ்வாறு இந்தப் பெண் உயிரிழந்தார் என்பது பற்றிய விபரங்களையும் பொலிஸார் இதுவரையில் வெளியிடவில்லை.

சில மாதங்களுக்கு முன்னர் ஒட்டாவாவில் தீயனைப்புப் படைவீர்ர் ஒருவர் ஸ்கைடைவ் செய்த போது கீழே வீழ்ந்து உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.