Reading Time: < 1 minute

கனடாவின் வன்கூவரில் பட்டாக்கத்தி மூலம் தாக்குதல் நடத்திய ஒருவரை பொலிசார் துப்பக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

Tamil Business Directory

தாக்குதலில் படுகாயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு 10.00 மணியளவில், Granville Street பகுதியில் பலர் குடியிருக்கும் ஒரு வீட்டில் ஒருவர் தீவைத்துள்ளார். அத்துடன், அந்த கட்டிடத்தில் வசித்த நான்கு பேரை பட்டாக்கத்தியால் தாக்கியும் இருக்கிறார் அவர். தீயை அணைக்க வந்த தீயணைப்புத்துறையினர் உடனே பொலிசாரை அழைத்துள்ளனர்.

பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையிலும் அந்த நபர் கையில் கத்தியுடன் இருக்கவே, பொலிசார் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

அதற்குப் பின் கைது செய்யப்பட்ட அந்த நபரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் நிலையில், தாக்குதலில் தொடர்புடையவர்கள் யாருடைய அடையாளங்களையும் அவர்கள் வெளியிடவில்லை.