Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று இலட்சத்தைக் கடந்தது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மூன்று இலட்சத்து இரண்டாயிரத்து 192பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 11 ஆயிரத்து 027பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஆறாயிரத்து 115பேர் பாதிக்கப்பட்டதோடு, 74பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 50ஆயிரத்து 878பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 334பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இரண்டு இலட்சத்து 40ஆயிரத்து 287பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.




