Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று இலட்சத்தைக் நெருங்குகின்றது.

Tamil Business Directory

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் இரண்டு இலட்சத்து 96ஆயிரத்து 77பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து ஆயிரத்து 953பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், நான்காயிரத்து 146பேர் பாதிக்கப்பட்டதோடு, 62பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 49ஆயிரத்து 723பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 334பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இரண்டு இலட்சத்து 35ஆயிரத்து 401பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.