Reading Time: < 1 minute

சீனாவில் இருந்து வெளியேறிய 10,000 உய்குர் அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதற்கான பிரேரணை கனடா நாடாளுமன்றம் புதன்கிழமை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.

Tamil Business Directory

சீனாவில் உய்குர் மற்றும் துருக்கிய இஸ்லாமியர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் ஒடுக்குமுறைகள் இன அழிப்பு என்றே கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடையாளப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2021 பிப்ரவரி மாதம் முக்கிய முடிவொன்றை முன்னெடுத்தனர். இதன்படியே, சீனா முன்னெடுப்பது இன அழிப்பு என கனடா நிர்வாகம் அடையாளப்படுத்தியது.

மேலும், சீனாவில் உய்குர் மக்கள் உட்பட பிற இஸ்லாமிய சிறுபான்மையினர் சுமார் 1 மில்லியன் மக்கள் Xinjiang பகுதியில் உள்ள தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி, சிறுபான்மை இனப் பெண்களை வலுக்கட்டாயமாக கருத்தடை செய்வதாகவும், கட்டாய உழைப்பை திணிப்பதாகவும் சீனா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுவரை சீனாவின் ஒடுக்குமுறைக்கு அஞ்சி பல ஆயிரம் மக்கள் வெளியேறியுள்ளனர். மேலும், சீன ஆதரவு நாடுகளில் தஞ்சம் புகுந்த மக்கள் சுமார் 1600 பேர்கள் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் நாடுகடத்தப்படும் கட்டயத்தில் உள்ளனர்.

இந்த நிலையிலேயே, எதிர்வரும் 2024 முதல் கனடாவில் உய்குர் மக்கள் 10,000 பேர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் பிரேரணை ஒன்றை கனடா நாடாளுமன்றம் புதன்கிழமை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.