Reading Time: < 1 minute

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திற்கு எபோலா வைரஸ் அச்சத்தால் கனடாவில் தரையிறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tamil Business Directory

மத்திய கிழக்கு ஆபிரிக்க நாடான கொங்கோவில் பரவி வரும் எபோலா வைரஸினால் இதுவரை 140இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் வேகமாக பரவி வருவதால் கொங்கோ உள்ளிட்ட சில ஆபிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு
அதன்படி, கொங்கோ போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவு செல்ல வேண்டுமெனில் வொஷிங்டன் விமான நிலையம் வழியாகவே அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரான்ஸ் பாரிசில் இருந்து அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திற்கு இன்று ஏர் பிரான்ஸ் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

அந்த விமானத்தில் காங்கோ நாட்டை சேர்ந்த பயணியும் இருந்துள்ளார். காங்கோவை சேர்ந்தவர்கள், அமெரிக்க குடியுரிமை பெற்ற காங்கோ நாட்டினர் வாஷிங்டன் விமான நிலையம் வழியாகவே அமெரிக்காவுக்குள் நுழைய முடியும் என்ற விதி உள்ளது.

இதனால், ஏர் பிரான்ஸ் விமானம் மிச்சிகன் மாகாணத்தில் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, ஏர் பிரான்ஸ் விமானம் கனடாவுக்கு திருப்பி விடப்பட்டடு விமானம் கனடாவின் மாண்ட்ரியல் நகரில் தரையிறங்கியது.

விமானம் தரையிறங்கியப்பின் காங்கோ நாட்டின் பயணியிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அந்த பயணி மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அந்த பயணியை தவிர பிற பயணிகள் அனைவரும் அதே விமானத்தில் அமெரிக்காவின் மிச்சிகனுக்கு புறப்பட்டு சென்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.