Reading Time: < 1 minute
Tamil Business Directory
நோர்த் யோர்க் பிராந்தியத்தில் இரண்டு பெண்களை கத்தியால் குத்திக் கொன்றதாக நபர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
46 வயதான நபர் ஒருவரின் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நோர்த் யோர்க்கின் விலேவல்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் 44 வயதான பெண் ஒருவரும், 20 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.
கத்தி குத்துக்கு இலக்கான இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவ இடத்தில் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில் பிடிக்கப்பட்ட நபர் ஒருவரே இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த சந்தேக நபருக்கு எதிராக இரண்டு கொலைக் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.




