Reading Time: < 1 minute

சீனாவின் தொலைத்தொடர்பு முன்னோடியான ஹூவாவேயின் தலைமை நிறைவேற்று அதிகாரி மெங் வாங்ஷோவை, உடனடியாக விடுத்து அவர் பாதுகாப்பாக நாடு திரும்ப வழிவகை செய்ய வேண்டும் என கனடாவுக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீனத் தூதுவர் டோமினிக் பார்டோன் தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

புதிதாக பதவியேற்றதன் பின்னர், இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “தற்போதய நிலவரப்படி கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவானது மிகவும் மோசமான நிலையினை எதிர்கொண்டுள்ளது. எனவே கனடா தனது சொந்த தவறை உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்த விடயத்தில் சீனாவின் நிலைப்பாட்டையும் அக்கறையையும் கனடா கடுமையாக நோக்க வேண்டும். அந்த வகையில் மெங் வான்ஷோவை உடனடியாக விடுத்து அவர் பாதுகாப்பாக நாடு திரும்ப வழிவகை செய்ய வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும், நிலவரத்திற்கும் கனடாவே பொறுப்பு” என கூறினார்.