Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பியா- ஹரிசன் ஏரியில் மூழ்கியிருந்த வாகனத்தில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

வன்கூவரில் இருந்து கிழக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏரியில் இருந்தே, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், அகாஸிஸ் பொலிஸ் மற்றும் கென்ற் ஹரிசன் தேடல் மற்றும் மீட்பு உறுப்பினர்கள் இந்த எஸ்.யு.வி ரக வாகனத்தை கடுமையான போராட்டத்திற்கு பின்னர், கரைக்கு கொண்டு வந்தனர்.

வாகனத்திற்குள் இருந்த சடலங்கள் அடையாளங் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார், கண்டெடுக்கப்பட்ட உடல்கள் குறித்த விவரங்களை எதனையும் வெளியிடவில்லை.

குறித்த வாகனம் சுமார் 10 மணி நேரம் நீரில் இருந்திருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.