கடந்த 1918ஆம் ஆண்டு குறித்த படகு ஹார்ஸ் ஷூ அருவிக்கு அருகே தரைதட்டிய பின் நீருக்குள் மூழ்கியது.
சுமார் 164 அடி நீளம் கொண்ட அந்தப் படகு கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக நீருக்கு வெளியே வந்தது.
பின்னர் ஆற்றின் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட அந்தப் படகு தற்போது அந்த நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் காணப்படுகிறது.
தற்போது அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் படகு மேலும் இழுத்துச் செல்லப்பட்டு அருவியிலிருந்து கீழே தள்ளப்படும் என நயாகரா நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படகினைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் அப்பகுதிக்குச் செல்கின்றனர்.