Reading Time: < 1 minute

நேற்று பிற்பகல் வேளையில் ஸ்காபரோவில் வைத்து பெண் ஒருவரைக் கத்தியால் குத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 23 வயது ஆண் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கு ரொரன்ரோ காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Tamil Business Directory

Victoria Park Avenue மற்றும் Ellesmere வீதிப் பகுதியில் நேற்று பிற்பகல் 1:25 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள துரித உணவகம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்திற்கு இருவரும் சென்றதாகவும், மோதல்கள், வாக்குவாதங்கள் எவையும் இடம்பெறாத நிலையில், குறித்த அந்த நபர் பெண்ணைக் கத்தியால் குத்தியதாகவும், அதனை அடுத்து அந்த நபர் அங்கிருந்து கால்நடையாகத் தப்பியோடிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், சந்தேக நபர் ரொரன்ரோவைச் சேர்ந்த 23 வயதான டாசெல் டிக்கோஸ்ட்டா ஹென்றி என்பவர் எனவும் அடையாளம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த அந்த நபர் ஆயுதங்களுடன் நடமாடக்கூடிய ஆபத்தானவராக இருக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்து்ளள காவல்துறையினர், அவரைக் காண நேர்ந்தால் உடனடியாக தமக்குத் தெரியப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.