Reading Time: < 1 minute
Tamil Business Directory
ஸ்காபரோ Milliken குடியிருப்புப் பகுதியில் நேற்று பிற்பகல் வேளையில் இடம்பெற்ற விபத்து ஒன்றில், உந்துருளி ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Steeles Avenue மற்றும் McCowan வீதிச் சந்திப்பில் நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தின் போது படுகாயமடைந்த உந்துருளி ஓட்டுனர் சுயநினைவை இழந்துவிட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதிலும், சிறிது நேரத்தின் பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவித்தமைக்கான தெளிவான காரணம் கண்டறியப்படாத நிலையில், அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்த அதிகாரிகள், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை இடம்பெற்ற 34ஆவது போக்குவரத்து விபத்து உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.




