Reading Time: < 1 minute

அப்பர் வெலிங்டனில் பகுதியில் பாதசாரியொருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகன சாரதியொருவரை, பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tamil Business Directory

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 12:15 மணியளவில், இன்வெர்னஸ் அவென்யூ கிழக்கில் அப்பர் வெலிங்டன் பகுதியில் நடந்துக் கொண்டிருந்த 29 வயதான ஆனொருவர் மீதே இவ்வாறு வாகனம் மோதியுள்ளது.

எனினும், இந்த விபத்தின் பின்னர், வாகனத்தால் மோதப்பட்ட அந்த நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய குறித்த வாகனம், அப்பர் வெலிங்டனில் தெற்கே சென்று குயின்ஸ்டேல் அவென்யூ நோக்கி வலதுபுறம் திரும்பிச் சென்றதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இருண்ட எஸ்யூவி அல்லது வான் அந்த நபரைத் மோதியதாக சந்தேகிக்கும் பொலிஸார், இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.