Reading Time: < 1 minute

கனடாவில் வான்கூவரில் இடம்பெற்ற விழாவில் கார் மோதியதில் பலர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

கனடாவின் இடம்பெற்றுள்ள இந்த துயர சம்பவம் தொடர்பில் தாம் வருந்துவதாக மன்னர் சார்லஸ் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வான்கூவரில் நிகழ்ந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அறிந்த நானும் எனது மனைவியும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளோம். இத்தகைய ஒரு துயர சம்பவத்தால் உயிரிழந்த அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான பிரார்த்தனைகள் உரித்தாகட்டும்.

இந்தச் சம்பவம் கனடாவில் பலருக்கும் மிகவும் வேதனையை உருவாக்கியுள்ள நேரத்தில், எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

வான்கூவர் சம்பவத்தில் 5 வயது குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்த நிலையில், காரை ஓட்டி சென்ற 30 வயது நபர், கனடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.