Reading Time: < 1 minute

கடந்த ஆண்டு மே மாதம் கனடா மன்னர் மூன்றாம் சார்லஸ் ஒட்டாவாவிற்கு மேற்கொண்ட ஒரு நாள் (24 மணிநேரம்) பயணத்திற்காக, கனடிய வரி செலுத்துவோரின் பணம் சுமார் 2.6 மில்லியன் டொலர் பணம் செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tamil Business Directory

இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நிமிடத்திற்கும் சராசரியாக 1,830.89 டொலர் செலவு செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

மன்னராகப் பொறுப்பேற்ற பிறகு கனடாவுக்கு அவர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். இதற்கான முக்கிய செலவினங்கள் பின்வருமாறு: வான்வழி அணிவகுப்பு மற்றும் மரியாதைக்கு மட்டும் 870,000 டொலர் செலவிடப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 860,000 டொலர் செலவானது. வான்வழி மற்றும் தரைவழிப் போக்குவரத்துக்காக 370,000 டொலர் ஒதுக்கப்பட்டது.

இதில் மன்னர் பயணித்த புதிய ‘ஏர்பஸ் CC-330’ விமானத்தின் எரிபொருள் செலவு மட்டும் சுமார் 225,000 டொலராகும். பயணிகளுக்கான 800-க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களுக்கு 70,000 டொலரும், ஹோட்டல் அறைகளுக்கு 14,000 டொலரும் செலவிடப்பட்டது.

மேசை விரிப்புகளுக்கு 997 டொலரும் ஹாக்கி ஜெர்சிகளுக்கு 656 டொலர் மற்றும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 50,000 டொலர் நன்கொடை ஆகியவையும் இதில் அடங்கும். இந்த மிகப்பெரிய செலவினம் கனடா அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மன்னர் சார்லஸ் 4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இந்தச் செலவு விவரங்கள் கனடாவில் பேசுபொருளாகியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.