Reading Time: < 1 minute

கனடாவில் புதிய தொற்று அடையாளம் காணப்பட்டமை எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொற்று பல நாடுகளுக்கு பரவும் அபாயம் காணப்படுகின்றது.

இந்நிலையில் கனடாவில் இருவருக்கு புதிய தொற்று அடையாளம் காணப்பட்டது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டுர்ஹாம் பிராந்தியத்தில் புதிய தொற்றுடன் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை என வன்கூவர் தொற்றுநோயியல் நிலையத்தின் மருத்துவர் பிரையன் கொன்வே தெரிவித்துள்ளார்.