Reading Time: < 1 minute

கனடாவில் பிள்ளைகளை வீதியில் விட்டுவிட்டு கசினோ விளையாடியதாக இரண்டு தாய்மாருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Tamil Business Directory

இரண்டு, ஒன்பது மற்றும் பத்து வயதான சிறார்களே இவ்வாறு கைவிடப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

பெரியவர்களின் மேற்பார்வையின்றி குறித்த மூன்று சிறார்களும் கசினோ விளையாடும் மையத்தின் வாகனத் தரிப்பிடத்தில் விளைடியாடிக் கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

பிள்ளைகளை நிர்க்கதியாக விட்டு விட்டு கசினோ சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக டர்ஹம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சிறுவர்கள் சுமார் நான்கு மணித்தியாலங்களாக வாகனத் தரிப்பிடத்தில் எவரது கண்காணிப்பும் இன்றி விளையாடிக் கொண்டிருந்ததனை கசினோ நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர் அவதானித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த உத்தியோகத்தர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். 39 மற்றும் 41 வயதான இரண்டு பெண்கள் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.