Reading Time: < 1 minute

பிரம்டனில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றும் ஒரு நபருக்கு போலீசார் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி இரண்டு ஆண்கள் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை கொள்ளையிட்டுள்ளனர்.

ஹுரான்டாரியோ மற்றும் போகியார் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள எரிபொருள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போலியான துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தி குறித்த நபர்கள் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 30 வயதான பிரம்டனை சேர்ந்த ஜட்டார் சிங் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 30 வயதான ட்ரான்ஜோர்ட் சிங் என்ற சந்தேக நபரை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

போலி ஆயுதம் ஒன்றை காண்பித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.