Reading Time: < 1 minute
Tamil Business Directory
பிரம்டனில் வாகனம் ஒன்றினால் மோதப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதசாரி ஒருவர், சிகிச்சைகள் பலனின்றி அங்கு உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Steeles Avenue மற்றும் Hurontario Street பகுதியில் நேற்று இரவு 9:30 அளவில் குறித்த அந்த பாதசாரி வாகனத்தினால் மோதுண்டதனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உடனடியாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைகள் பலனின்றி சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே தரித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்த காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




