Reading Time: < 1 minute

கனடாவின் யோர்க் பிராந்தியத்தின் நியூமார்க்கட் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

டேவிஸ் ட்ரைவ் மற்றும் கெலி வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.

அருகாமையில் அமைந்துள்ள பண்ணையொன்றிலிருந்து சில குதிரைகள் தப்பித்து வீதியில் இறங்கியுள்ளன.

வேகமாக பயணம் செய்த வாகனம் குதிரைகளில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துச் சம்பவத்தில் 60 வயதான நபர் ஒருவர் உயரிழந்துள்ளார்.

சில குதிரைகள் மீது மோதுண்ட வாகனம் குடைசாய்ந்துள்ளது என்பதுடன் அதில் பயணித்த நபர் வீசி எறியப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் குதிரையொன்றும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பண்ணையிலிருந்த குதிரைகள் இரவில் எவ்வாறு தப்பித்து வீதிக்கு வந்தன என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை.

குறித்த குதிரைகள் அனைத்தும் மீண்டும் பண்ணையில் பாதுகாப்பாக சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.