Reading Time: < 1 minute

கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், கடமான் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 36 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

இந்த விபத்து, ஜூலை 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 2:20 மணியளவில், Bartibog பகுதியில் உள்ள Route 8 நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது.

Tracadie, Neguac மற்றும் Chaleur RCMP பிரிவுகளைச் சேர்ந்த காவல்துறையினர், மோட்டார் சைக்கிள் ஒன்று கடமான் மீது மோதியதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

விபத்தில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த Bathurst பகுதியைச் சேர்ந்த 36 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் பயணியாக இருந்த மற்றொருவர் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

Miramichi தீயணைப்புத் துறையினர் மற்றும் Ambulance New Brunswick பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

New Brunswick Coroner’s Office அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு சென்று, நடைபெற்று வரும் விசாரணைக்கு உதவி செய்து வருகிறார்.

உயிரிழந்த நபரின் துல்லியமான மரணக் காரணத்தை உறுதிப்படுத்த உடற்கூறாய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த விபத்து தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.