கனடாவில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் தீவிரவாதக் கருத்துக்கள் பரவி வருவது குறித்து கனடிய உளவுத்துறை தனது 2025-ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
13 வயது சிறுவர்கள் கூட தற்போது உளவுத்துறையின் தீவிரவாத எதிர்ப்பு விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர்.
உளவுத்துறை மேற்கொள்ளும் ஒவ்வொரு 10 விசாரணைகளிலும், குறைந்தது ஒரு விசாரணையாவது 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களை உள்ளடக்கியதாக உள்ளது.
தீவிரவாதச் செயல்களில் ஈடுபட முயன்றதாக 2023-இல் 5 பேரும், 2024-இல் 2 பேரும், 2025-இல் 4 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது வியப்பளிக்கவில்லை, ஆனால் கவலையளிக்கிறது. இணையம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் வழியாக சிறுவர்கள் எளிதில் குறிவைக்கப்படுகிறார்கள் என முன்னாள் உளவுத்துறை அதிகாரி நீல் பிஸன் (Neil Bisson) கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவர்கள் எதைப் பார்க்கிறார்கள், யாருடன் பேசுகிறார்கள் என்பது அவர்களின் மனநிலையை மாற்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளங்கள், என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசேஜிங் ஆப்ஸ் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்கள் வழியாக சிறுவர்கள் தீவிரவாதக் கருத்துக்களால் ஈர்க்கப்படுகிறார்கள் என சைபர் பாதுகாப்பு நிபுணர் ரித்தேஷ் கோடக் குறிப்பிட்டார்.
ஆன்லைன் நிறுவனங்கள் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.