ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற கனடா பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை, அர்மீனியா நாட்டில் நடைபெற்ற ஐரோப்பிய அரசியல் சமூக உச்சி மாநாட்டில் கனடா பிரதமரான மார்க் கார்னி கலந்துகொண்டார்.
இதற்கிடையில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவரான ராபர்ட்டா மெட்சோலா, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற கனடா பிரதமரான மார்க் கார்னிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டின்போது ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவரான ரோபெர்ட்டா மெட்சோலாவை சந்தித்த கார்னி, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதில் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
ரோபெர்ட்டாவின் அழைப்பை ஏற்றுக்கொள்வதில் தான் மிக்க மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்த மார்க் கார்னி, தனக்கு அழைப்பு விடுத்ததற்காக அவருக்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டார்.
முக்கிய விடயம் என்னவென்றால், கனடா ஐரோப்பிய நாடு அல்ல. அது ஒரு வட அமெரிக்க நாடு.
ஆக, ஐரோப்பிய அரசியல் சமூக உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் முதல் கனேடிய பிரதமர் என்னும் பெருமை கார்னியை வந்தடைகிறது.
விடயம் என்னவென்றால், ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானதைத் தொடர்ந்து அவர் கனடாவை மோசமாக நடத்திவருகிறார்.
ஆகவே, அமெரிக்காவை தவிர்ப்பதற்காக ஐரோப்பாவுடன் நெருக்கமான உறவு வைத்துக்கொள்ள கனடா பிரதமரான மார்க் கார்னி நடவடிக்கை மேர்கொண்டுவருகிறார்.
அதற்கேற்றாற்போல், தற்போது ஐரோப்பிய அரசியல் சமூக உச்சி மாநாட்டிலும் அவர் கலந்துகொண்டுள்ளதுடன், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றவும் கார்னிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாக அமைந்துள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.