Reading Time: < 1 minute

காணாமல் போயுள்ள தாயையும் மகனையும் கண்டுபிடிக்க உதவுமாறு, வின்னிபெக் பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

Tamil Business Directory

34 வயதான மேகன் மில்ஸ் என்ற தாயும், தனது ஆறு மாத மகனுடன் காணமல்போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாய் இறுதியாக, கடந்த புதன்கிழமை மாலை வின்னிபெக்கின் வெஸ்ட் எண்ட் பகுதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர், ஐந்து அடி ஆறு அங்குலம், சராசரியான உடல் தோற்றம். இளஞ்சிவப்பு, அலை அலையான கூந்தல் மற்றும் சில நேரங்களில் கண்ணாடி அணிந்திருப்பார் என விபரிக்கப்பட்டுள்ளது.

இவர், 2016 நீலம் ஜீப் காம்பஸை உரிமத் தகடு எச்.எக்ஸ்.வி 619 உடன் இவர், இருப்பதாக நம்பப்படுகின்றது.

இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் வின்னிபெக் பொலிஸ் சேவையின், காணாமல்போனோர் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.