Reading Time: < 1 minute

ஸ்கார்பரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

Tamil Business Directory

ஸ்கார்பரோவில் உள்ள மதுக்கடை ஒன்றுக்கு வெளியே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.

லோரன்ஸ் அவென்யூ மற்றும் ஸ்கார்பரோ கோல்ஃப் கிளப் சாலை பகுதியில் உள்ள ஒரு மதுக்கடைக்கு வெளியே சந்தேகநபர்கள் ஒருவரை இலக்குவைத்து இரண்டு முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகளை பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து அந்த இடத்தை விட்டு தப்பிச்சென்ற மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.