Reading Time: < 1 minute

கனடாவின் டொரன்றோவில் போதைப்பொருள் குற்ற செயல்களுடன் தொடர்புடைய 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 60க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் சுமார் ஒரு மாத கால விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்த சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஹால்டன் பிராந்திய பொலிஸ் சேவையினர் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தியுள்ளனர்.

இந்த விசேட விசாரணை நடவடிக்கை கட் ஃபிஷ் என பெயரிடப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து மூன்று கைத்துப்பாக்கிகள், 4 கிலோ கிராம் எடையுடைய மெத்தப்பட்டமைன் போதை பொருள், 3 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதை பொருள், சுமார் ஒரு கிலோ கிராம் எடையுடைய பென்டனயில் போதை பொருள் மற்றும் 120000 டொலர் பணம் மற்றும் இரண்டு வாகனங்கள் என்பன சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.