Reading Time: < 1 minute

கனடாவின் டர்ஹமின் கோர்டிஸ் Courtice பகுதியில் புதன்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில், 40 வயதிற்கு உட்பட்ட ஒருவர் உயிரிழந்தார் என டர்ஹம் பகுதி காவல்துறை தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

இந்த விபத்து ட்ருல்ஸ் வீதியில் Trulls Road-இல், ப்ளோர் Bloor மற்றும் அவோன்டுல் ட்ரைவ் Avondale Drive ஆகியனவற்றுக்கு இடையில் இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கடுமையான காயங்களுக்கு ஆளாகி, உயிரிழந்தார்.

அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.