Reading Time: < 1 minute

றொரண்டோவின் செர்ரி பீச் அருகே ஒன்ராறியோ ஏரியில் காற்றடைக்கப்பட்ட படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான நபரைத் தேடும் பணியை றொரண்டோ பொலிஸார் மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

Tamil Business Directory

புதன்கிழமை மதியம் சுமார் 1:45 மணியளவில் செர்ரி பீச் பகுதியில் சிறிய காற்றடைக்கப்பட்ட படகு ஒன்று கவிழ்ந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த றொரண்டோ பொலிஸின் கடற்படை பிரிவினர், நீரில் சிக்கியிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவரை பத்திரமாக மீட்டனர்.

அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், படகில் இருந்த ஒரு நாயும் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

ஆனால், படகில் இருந்த மற்றொருவர் நீரில் மூழ்கி மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர இருள் காரணமாக தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை காலை மீண்டும் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

றொரண்டோ பொலிஸாரின் கடற்படை பிரிவு ஒன்ராறியோ ஏரிப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.