Reading Time: < 1 minute

வன்கூவரின் சர்ரே பகுதியில் உள்ள பெரிய வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக சர்ரே தீயணைப்புச் சேவை தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

நேற்றுத் திங்கட்கிழமை 9900 தொகுதி- 135 ஏ வீதிப் பகுதிக்கு காலை 10:35 மணிக்கு தீயணைப்பு குழுவினர் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்ரே தீயணைப்பு சேவையின் உதவித் தலைவர் டேவிட் பேர்ன்ஸ் கூறுகையில், “நாம் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, கடுமையான தீப்பரவல் இருந்தது. பின்னர் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் கட்டிடத்திற்குள் நுழைந்தோம்.

இதில் இரண்டாவது மாடியில் ஒரு வயதான பெண்ணைக் கண்டு மீட்டொடுத்தோம். ஆனால் அவர் இறந்துவிட்டார்” என கூறினார்.

எனினும், இவ்விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இதுகுறித்து பொலிஸ் துப்பறிவாளர்கள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.