Reading Time: < 1 minute

சட்டவிரோதமாக கனடாவுக்கு வர யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

சந்தேகநபர் கடவுச்சீட்டை சமர்ப்பித்த போது, அதில் காணப்பட்ட படத்தில் வேறுபாடு காணப்படுவதை அவதானித்த அதிகாரிகள் அதனை கணினி பகுப்பாய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது குறித்த கடவுச்சீட்டை வைத்திருப்பவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு திருகோணமலை நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது சந்தேகநபரின் பயணப் பொதியில் இருந்த அவரது உண்மையான தேசிய அடையாள அட்டையை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதனையடுத்து யாழ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுதாக கூறப்படுகின்றது.