Reading Time: < 1 minute
Tamil Business Directory
உள்நாட்டிலேயே கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியைத் தயாரிப்பதற்கான செயற்திட்டத்தை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ளார்.
இதற்காக பிரதமர் ஜஸ்டின், 214 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்காக கியூபெக் நிறுவனத்துடன் மத்திய அரசாங்கம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சுமார் 7.6 கோடி கொவிட்-19 தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் ட்ரூடோ கூறுகையில், ”இந்த நடவடிக்கையானது, கனடா மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி விரைந்து கிடைப்பதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், ஆராய்ச்சித் துறையில் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும்.
அடுத்த ஆண்டின் முதல்பாதிக்குள் கொவிட்-19 தடுப்பூசி மக்களுக்குக் கிடைக்கும் என நம்புகிறேன்” என கூறினார்.




