Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் மூவாயிரத்து 457பேர் பாதிக்கப்பட்டதோடு, 36பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை இரண்டு இலட்சத்து 31 ஆயிரத்து 999பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக பத்து ஆயிரத்து 110பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 27ஆயிரத்து 952பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 93ஆயிரத்து 937பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதில் 228பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




