Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடிய பொருளாதாரத்தில் சிறிதளவு சரிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு பகுதியில் நாட்டின் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ளது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
எனினும், இந்த சரிவு நிலையானது, பொருளாதார நெருக்கடி அளவிற்கு ஆபத்தானதல்ல என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்றாம் காலாண்டில் கடந்த ஆண்டை விடவும் 1.1 வீத பின்னடைவை சந்தித்துள்ளது.
ஏற்றமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இவ்வாறு பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.




