Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பிய பொதுத் தொழிலாளர் தொழிற்சங்கம், அதிகரித்து வரும் எரிபொருள் விலை காரணமாக மாகாண கட்டுப்பாட்டில் உள்ள ஊழியர்கள் முழுநேரமாக வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

Tamil Business Directory

95,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட இந்த சங்கம், அதில் 35,000 பொதுச் சேவை ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

ஈரான் போரின் தாக்கத்தால் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதால், ஊழியர்களின் செலவுச் சுமையை குறைப்பதற்காக தற்காலிகமாக இந்த அனுமதி வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும், வேலை காரணமாக அடிக்கடி பயணம் செய்ய வேண்டியவர்களுக்கும், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த முடியாதவர்களுக்கும் மாகாணம் தற்காலிக நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பிய பொது சேவையில் நெகிழ்வான வேலை முறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாக மாகாண நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேவையான சூழலில், பணியாளர்கள் மற்றும் நிர்வாகம் இருவரும் ஒப்புக்கொண்டால் முழுநேரமாக வீட்டிலிருந்து வேலை செய்வதற்கும் அனுமதி வழங்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மாகாண தகவலின்படி, ஜனவரி மாத நிலவரப்படி சுமார் 70% பொதுச் சேவை ஊழியர்கள் தொலைப்பணி ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர்.

எரிபொருள் விலை உயர்வு பற்றிய தகவலின்படி, பெப்ரவரி இறுதியில் லிட்டருக்கு சுமார் 130 சென்ட் இருந்த விலை, தற்போது 173 சென்ட்டாக உயர்ந்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வு தொழிலாளர்களுக்கு அதிக சுமையாக உள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி வழங்குவது அந்த சுமையை குறைக்கும் ஒரு நல்ல வாய்ப்பு” என்றார்.

மேலும், இது காற்று மாசுபாட்டையும், சாலை நெரிசலையும் குறைக்க உதவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேபோல், கனடிய தொழில்முறை பணியாளர்கள் அமைப்பும் கனடா அரசிடம் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளது.