Reading Time: < 1 minute

கனடாவின் வான்கூவார் பகுதியில் வசிக்கும் ஒரு சிறுவன், அமெரிக்காவில் பள்ளிக்கூடம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என மிரட்டல் விடுத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

இந்த விசாரணை முதலில் கென்டக்கி மாநிலத்தில் 2025 ஜூலை 19ஆம் திகதி தொடங்கப்பட்டது.

அங்கு 15 வயது இளைஞர் ஒருவர் டிஸ்கோர்ட் என்ற தகவல் பரிமாற்ற தளத்தின் மூலம் உள்ளூர் பாடசாலையை தாக்குவதாக மிரட்டல் விடுத்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

அமெரிக்க விசாரணையில், அந்த இளைஞர் கனடாவில் உள்ள ஒருவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது.

பின்னர் அந்த கனடிய நபர் எட்வர்ட் மில்னி பாடசாலையில் பயிலும் மாணவர் என அடையாளம் காணப்பட்டது.

இந்த வழக்கு வான்கூவார் பொலிஸ் பிரிவிற்கு மாற்றப்பட்டு, மார்ச் 13ஆம் திகதி குற்ற விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த சிறுவருக்கு “மிரட்டல் விடுத்தல்” குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கியது.

இளைஞர் குற்றச்சாட்டு சட்டத்தின் காரணமாக அவரது பெயர் வெளியிடப்படவில்லை. மார்ச் 28ஆம் திகதி பொலிஸார் குறித்த சிறுவனை எந்த சிக்கலும் இல்லாமல் கைது செய்தனர்.

மேலும், சூக் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஜாமீன் விசாரணைக்காக காத்திருக்கிறார்.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள், இணைய வழி மிரட்டல்களை தடுக்க சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.