Reading Time: < 1 minute

கனடாவின் Markham நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் வழிபடச் சென்ற முஸ்லீம்களை தனது வாகனத்தால் மோதவும், பயமுறுத்தவும் முனைந்த 28 வயதான Torontoவைச் சேர்ந்த தமிழ் வாலிபர் ஒருவர் York பிராந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

நோன்பினை முடிக்கும் நோக்கில், Markham நகரில் Denison & Middlefield சந்திப்பில் உள்ள மசூதியில் கடந்த வியாழக்கிழமை வழிபாடு செய்யச் சென்றவர்களை மோதக் கூடிய விதத்தில் சரன் கருணாகரன் என்ற இந்தத் தமிழ் வாலிபர் தனது வாகனத்தினைச் செலுத்தியதாகவும், அச்சுறுத்தல் வார்த்தைகளை பாவித்து இன அவதூறுகளை உள்ளடக்கிய கருத்துக்களை தெரிவித்ததாகவும் York பிராந்திய காவல்துறையினர் குற்றஞ் சாட்டி வெள்ளிக்கிழமை நள்ளிரவு இவரைக் கைது செய்துள்ளார்கள்.

இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் வகையிலான இனக்குரோத கருத்துக்களை கருணாகரன் வெளியிட்டார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.