Reading Time: < 1 minute

கனடாவின் தென் ஒன்றாரியோ பகுதியில் பாரியளவு போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

Tamil Business Directory

ஒன்றாரியோவின் கெனோரா பகுதியில் இவ்வாறு போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த போதை பொருட்களுடன் பிரம்டனைச் சேர்ந்த 20 மற்றும் 23 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெருந்தொகையான போதை மாத்திரைகள் இவர்களிடம் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவற்றின் சந்தை பெறுமதி சுமார் 4 லட்சம் டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமான முறையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.