Reading Time: < 1 minute

கனடாவில், புலம்பெயர்வோரைக் கடத்துபவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

கியூபெக்கில், கனடா அமெரிக்க எல்லையில், செவ்வாயன்று புலம்பெயர்வோர் சிலர் சட்டவிரோதமாக எல்லை கடந்ததாக அமெரிக்க எல்லை அதிகாரிகள் கனேடிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

சம்பந்தப்பட்ட வாகனத்தை கனேடிய பொலிசார் தடுக்க முயல, அந்த வாகனத்தின் சாரதி வண்டியை நிறுத்தாமல் வேகமாகச் சென்றுள்ளார்.

அவரது கார் பொலிஸ் கார் ஒன்றின் கதவின் மீது மோதியதில் பொலிசார் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பின்னர் அந்தக் காரின் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர் மீது அதிகாரி ஒருவரைத் தாக்கியது, விபத்தொன்றை ஏற்படுத்திய பிறகு வாகனத்தை நிறுத்தாமல் சென்றது முதலான பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்த வாகனத்திலிருந்த ஐந்து புலம்பெயர்வோரும் கைது செய்யப்பட்டு கனடா எல்லை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.