Reading Time: < 1 minute

மாகாண அளவிலான பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம் முதல் காவல்துறையினரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த 48 வயது பிரையன் கேரி கீவர் தற்போது பிடிபட்டுள்ளார்.

Tamil Business Directory

நோவா ஸ்கோடியாவின் வென்ட்வொர்த் (Wentworth) பகுதியைச் சேர்ந்த இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

தாக்குதல் , திருட்டு, மிரட்டல், நிபந்தனை மீறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

கீவரைக் கண்டறியத் தகுந்த தகவல்களை வழங்கி உதவிய பொதுமக்களுக்கு பொலிஸார் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

குற்றவாளியைக் கண்டறிய பொதுமக்களிடமிருந்து கிடைத்த ஆதரவு மிக முக்கியமானது என காவல்துறையின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.