Reading Time: < 1 minute

கனடாவின் மத்திய மிசிசாகா பகுதியில் அமைந்துள்ள நகையகம் ஒன்றிற்குள் வாகனத்தை மோதச்செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamil Business Directory

வாகனத்தில் இருந்தவர்கள் கால்நடையாக குறித்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

மிசசாகாவின் எக்லிகன் அவென்யூவில் அமைந்துள்ள நகையகம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வாகனம் சம்பவ இடத்திலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தின் ஊடாக கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களையும் வெளியிடவில்லை.